
Sports
மீண்டும் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் ஐதராபாத் அணி !! விட்டத பிடிச்சிடுமோ..?
முப்பையில் இன்று நடைபெற உள்ள கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். மும்பையில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடி இருக்கும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதில் பிளேஅப் சுற்றுக்கு முன்னேற எஞ்சியிருக்கும் ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் நான்கில் வெற்றி பெற வேண்டும்.
இதனால் இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு முக்கியத்துவமாக அமைந்து இருக்கும். இதே போல போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றிபெற்று இருக்கும் கேப்பிடல்ஸ் அணி எஞ்சிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஅப் சுற்றில் நீடிக்க முடியும்.
கடந்த போட்டியில் லக்னோ அணியிடம் வீழ்ந்த டெல்லியையும் சென்னை அணியிடம் வீழ்ந்த சன்ரைசர்ஸ் அணியும் வெற்றிக்காக முழு உழைப்பில் போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
