நடிகை அமலா வீட்டில் தெருநாய்களை கொண்டு செல்ல திட்டமா? ஐதராபாத்தில் பரபரப்பு!

பிரபல நடிகை அமலா வீட்டில் தெரு நாய்களை கொண்டு போய் விட ஐதராபாத்தில் சேர்ந்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக தெருநாய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும் குழந்தைகள் முதியவர்கள் என பலரையும் தெரு நாய்கள் கடிப்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டுமென ஹைதராபாத் மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நடிகை அமலா இது குறித்த வழக்கு கோர்ட்டில் பதிவு செய்து தெரு நாய்களை கொல்லக்கூடாது என தீர்ப்பு பெற்றுள்ளார் என்றும் அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் நடிகை அமலா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். தெருநாய்களால் நாங்கள் அடும் அவஸ்தை என்ன என்பதை அமலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றால் தான் அவருக்கு எங்களுடைய கஷ்டம் தெரியும் என்றும் கடிக்கும் தெருநாய்களை அமலாவின் வீட்டின் முன் கொண்டு செல்ல இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமலாவையும், அவரது குடும்பத்தினரையும் தெருநாய் கடித்தால் தான் அவர்களுக்கு வேதனை புரியும் என்று ஆவேசமாக பொதுமக்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.