தஞ்சையில் பயங்கரம்!! கணவன் கண்முன்னே மனைவி பலி..!!!

தஞ்சை அடுத்த நெடுவெண் காவடி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாக தெரிகிறது. இவருடைய மனைவி ஜெயலட்சுமி.

இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன் தனது மனைவியை தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

யானைகள் வழித்தடம்: செங்கல்சூளைகளை மூட ஐகோர்ட் உத்தரவு..!!

அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நிலைதடுமாறி ஜெயலட்சுமி கீழே விழுந்துள்ளார்.

அந்த சமயம் பின்னாடி வந்த கல்லூரி பேருந்து ஜெயலட்சுமியின் தலைமீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: 3 தமிழர்கள் பரிதாப பலி..!!!

குறிப்பாக தன்னுடைய கணவன் கண்முன்னே விபத்து நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment