மனைவியை 50 துண்டுகளாக்கி நாய்க்கு போட்ட கொடூர கணவன்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாஹிப்கஞ்ச் பகுதியை சேர்ந்த 22 வயது பழங்குடியின பெண் ரூபிகா என்பவருக்கும், அந்த பகுதியில் வசித்து வரும் தில்தார் அன்சாரி என்பவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது . அன்சாரிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ரூபிகாவை கடந்த 15 நாட்களுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்த சூழலில் தான் ரூபிகா சில தினங்களாக காணாமல் போய் உள்ளார்.ஆகவே ரூபிகாவின் பெற்றோர் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதனை தொடர்ந்து இந்த பெண்ணின் வீட்டருக்கே நாய்கள் எலும்புகளை கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதை அந்த பகுதி மக்கள் சந்தேக கண்ணுடன் பார்த்து கொண்டிருந்தனர்.

அது குறித்து உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க அவர்கள் அந்த எலும்புகளை மீட்டுள்ளனர். அப்போது தான் அன்சாரி மீது சந்தேகம் வர தொடங்கியது.

தற்போழுது ரூபிகாவின் 12 பாகங்கள் மீட்கப்பட்டுள்ளனர், மீதி உள்ள பாகங்கள் கிடைக்க வில்லை. அவற்றை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணி தற்போழுது நடந்து வருகிறது. அந்த பெண்ணின் கணவன் அன்சாரி காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரை; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

அன்சாரி தனது மனைவி ரூபிகாவின் உடலை கூர்மையான ஆயுதத்தால் 50 துண்டுகளாக வெட்டியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.