காய்கறி வெட்டும் கத்தியால் கொல்ல வந்த கணவன்! கத்தியை வாங்கி திருப்பி குத்திய மனைவி!!

கணவன் மனைவி பிரச்சனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த கணவன் மனைவி பிரச்சனை காரணமாக தினம்தோறும் ஆங்காங்கே கொலை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் கணவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கணவனை கொன்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நிகழ்ந்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வருகிறார் கட்டட தொழிலாளியான சந்தோஷ். இவரும் சுரேகா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அபிநயா என்ற பெண்குழந்தையும் வெற்றிவேல் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷுக்கு மது அடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினந்தோறும் மதுபானம் அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு கொண்டிருந்தார். இந்த நிலையில் சந்தோஷ் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்து கொண்டிருக்கும் போது ஆத்திரமடைந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை குத்த முயன்றுள்ளார்.

சுதாரிப்பாக இருந்த சுரேகா கத்தியைப் லாபகரமாக பிடுங்கி சந்தோஷின் மார்பு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேகா தான் நேரடியாகவே காவல் நிலையத்தில் சென்று ஆஜராகி விட்டார்.

இதன் பின்னர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு ரத்த வெள்ளத்தில் இருந்த சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக முன்னிய பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment