Connect with us

அருவிக்கு மனைவியை அழைத்து சென்று கணவன் செய்த ‘பகீர் ‘காரியம் : சென்னையில் பயங்கரம்!!!

murder

தமிழகம்

அருவிக்கு மனைவியை அழைத்து சென்று கணவன் செய்த ‘பகீர் ‘காரியம் : சென்னையில் பயங்கரம்!!!

சென்னை புழல் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண் காணவில்லை என செங்குன்றம் காவல்நிலையத்தில் அவர்களுடைய  பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக தமிழ்ச் செல்வியின் கணவர் மதன்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலம் கைலாசா கோனார் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்று  மிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு  அங்கேயே விட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எழும்புக்கூடு, செருப்பு, சுடிதார் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். அதோடு தடவியல் ஆய்வகத்திற்கு இவற்றை அனுப்பியுள்ளதாகவும் அறிக்கை வந்தால் மட்டுமே கொலை செய்யப்பட்டது யார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

அதோடு இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவியை நீர்வீழ்ச்சிக்கு அழைத்துசென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top