மேட்ரிமோனி மூலம் மனைவிக்கே மாப்பிள்ளை தேடிய கணவன்!!

மேட்ரிமோனி

தமிழகத்தில் குடும்பச் சண்டைகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. கணவன் மனைவி பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் விவாகரத்து அதிகமாக காணப்படுகிறது.

மேட்ரிமோனி இந்த நிலையில் விவாகரத்து கிடைக்காத கோபத்தால் மனைவிக்கே மாப்பிள்ளை தேடிய கணவர் தற்போது கைதாகியுள்ளார். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளதாக காணப்படுகிறது. திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகள் ஜான்சி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பாபுவின் மகன் ஓம் குமாருக்கும் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது.

இதனால் தன் கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓம் குமார் அமெரிக்காவிலிருந்து தன் மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு திரும்பியுள்ளார்.

மேட்ரிமோனி கடந்த மூன்று ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஓம் குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் அவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவே இல்லை. ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என தகவல் கொடுத்து அதில் அவரது தந்தையான பத்மநாதன் செல் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது.

விளம்பரத்தை பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர். அவரது தந்தை பத்மநாபனுக்கு தினமும் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் இது போல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் இவ்வாறு பதிவு செய்யவில்லை என்றும் கூறினார்.

மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் செய்யவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார். திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம் குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு தன் மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் ஓம் குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஓம் குமாரை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print