மனைவி அதிக சுத்தமாக இருப்பதால் விவாகரத்து கோரும் கணவர்… சுத்தத்தால் வந்த சிக்கல்…..

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தனது மனைவி அதிக சுத்தமாக இருப்பதால் விவாகரத்து வேண்டும் என கணவர் ஒருவர் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று தானே நினைக்கிறீர்கள்?

பெங்களூரை சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் ஆன்-சைட் பணிக்காக இங்கிலாந்து சென்றுள்ளனர். தொடக்கத்தில் மனைவி தினமும் வீட்டை கிளீன் செய்து சுத்தமாக வைத்திருப்பதை பார்த்து கணவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆனால் அதுவே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது தெரியாமல் போய்விட்டது. அதாவது ஒவ்வொரு முறையும் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ​​அவர் தனது உடைகள், காலணிகள் மற்றும் மொபைல் போன்களை சுத்தம் செய்யும்படி மனைவியால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து தம்பதியர் நாடு திரும்பிய பின், நிலைமை இன்னும் மோசமாக தொடங்கியுள்ளது. எந்தளவிற்கு என்றால் கொரோனா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த கணவரின் லேப்டாப் மற்றும் செல்போனை சோப் வைத்து கழுவும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

இதைவிட கொடுமை என்னவென்றால் அந்த பெண் ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு மேல் குளிப்பாராம். அதோடு அவரின் குளியல் சோப்பை சுத்தம் செய்ய பிரத்யேக சோப்பு ஒன்றும் வைத்துள்ளாராம். இதனால் வெறுப்படைந்த கணவர் குழந்தைகளை அழைத்து கொண்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறவும் திட்டமிட்டுள்ளாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment