கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றி கொலை செய்த கணவன் குறித்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் ஆஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சங்கர் நேற்று குடி போதையுடன் வீட்டிற்கு வந்த நிலையில் தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.
ஆனால் ஆஷா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே சங்கர் அவரை வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் கிணற்றில் குறித்துள்ளார். இதையடுத்து மனைவியை காப்பாற்ற சங்கரும் உடனே கிணற்றில் குதித்து ஒரு வழியாக அவரை காப்பாற்றி மேலே கொண்டு வந்துள்ளார்.
மேலே கொண்டு வந்த பின்னர் மீண்டும் உல்லாசம் குறித்து இருவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது . இதனை அடுத்து ஆத்திரமடைந்த சங்கர் ஆஷாவின் மர்ம உறுப்பில் கடுமையாக தாக்கியதாகவும் இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சங்கரை கைது செய்தனர். சங்கர் மற்றும் ஆஷா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆஷா உயிரிழந்த நிலையில் சங்கரும் சிறைக்கு சென்று விட்டதால் குழந்தைகள் இருவரும் தற்போது திக்கற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த குழந்தைகளை உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.