இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு காபி டே என்ற நிறுவனம் மிகப்பிரபலமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் எங்கு பார்த்தாலும் கண்ணில் படும் அளவுதான் இருந்தது.
இருப்பினும் இந்த காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ததால் கடந்த 2019ம் ஆண்டு முதலீட்டாளர்களின் நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் 165 நகரங்களில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் நிறுவனர் இறந்த உடன் என்ன செய்வதென்று இதன் ஊழியர்கள் திணறினர்.
இவர் 7000 கோடி கடனால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகாஅந்த நிறுவனத்தை தன் வசம் எடுத்துக்கொண்டார்.
துணிச்சலாக செயல்பட்ட இவர் 18 மாதங்களில் 3500 கோடி கடனை குறைத்து சாதனை படைத்தார்.
ஒரு பெண்ணின் வியத்தகு சாதனை இது என்று சமூக வலைதளங்கள் முழுவதும் இன்று பலர் மாளவிகாவை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.