Connect with us

அடக் கொடுமையே..! அடி வாங்க முடியாமல் மனைவி மீது புகார் அளித்த கணவர்…

202003190110286691 The father complained to the police that the womans body SECVPF

செய்திகள்

அடக் கொடுமையே..! அடி வாங்க முடியாமல் மனைவி மீது புகார் அளித்த கணவர்…

இந்தியாவில் பொதுவாகவே கணவர்கள் மனைவியை அடிப்பது வாடிக்கையான விஷயமாக அமைந்துள்ளது. ஆனால் மனைவி கொடுமை தாங்க முடியாமல் சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் பகுதியில் வசித்து வருபவர் அஜித் சிங். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் சுமன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதாக தெரிகிறது. இதனிடையே இனிப்பான தருணத்தில் தொடர்ந்த மணவாழ்க்கை கடந்த ஒரு ஆண்டுகளிலேயே கசப்பாக மாறியுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாக தெரிகிறது.

இதனால் சுமன் அஜித் சிங்கை கடந்த ஓராண்டு காலமாகவே அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக பாத்திரம், குச்சி, கிரிகெட் மட்டை போன்ற பொருட்களை பயன்படுத்தி கடுமையாக தாக்குவதாக கூறியுள்ளார்.

இதனிடையே சிசிடிவி ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top