குடும்ப பிரச்சினை-மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவர் தற்கொலை!!

தமிழகத்தில் குடும்ப சண்டைகளில் பல அசம்பாவிதங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஊடகங்கள் வாயிலாக குடும்ப சண்டையின் காரணமாக உயிர் இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

ஒரு சில இடங்களில் இந்த கருத்து வேறுபாடு கொலையை உருவாக்குகிறது, அதன்படி ஆத்திரத்தின் கத்தியால் மனைவியை குத்தி விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரியில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவன் பூபாலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கருத்து வேறுபாடல் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மது போதையில் மனைவி ஷாலினியை கத்தியால் குத்தினார் கணவர் பூபாலன்.

கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மனைவி ஷாலினி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. மேலும் அவர் இடத்தில் ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment