கேரளாவில் கொடூரம்!! சைக்கோ கணவரின் வெறிச்செயல்..!

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களை போல தென் மாநிலங்களிலும் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையன்கீவு பகுதியில் வசித்து வருபவர்கள் திலீப் – ஆதிரா தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திலீப் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

மலை போல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

இதனால் குடும்ப வறுமை காரணமாக ஆதிரா சூப்பர்மார்க்கெட்டில் வேலைக்கு சென்றுள்ளார். இத்தகைய செயல் திலீப்க்கு பிடிக்கவில்லை என்பதால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. அதன் உச்சக்கட்டமாக கடந்த 17-ம் தேதி ஆதிராவை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் இரத்தம் சொட்ட சொட்ட ஆதிரா வலியில் கதறியுள்ளார்.

அதே சமயம் திலீப் இதனை ரசித்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சம்பவம் குறித்து போலீஸார் எந்த வித நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்று கூறப்படுகிறது.

விஷவாயு கசிவில் உயிரிழப்பு: சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

பின்னர் திலீர் மனைவி போலீஸில் புகார் கொடுத்த நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment