செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து உள்ள இந்தலூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும், செய்யூர் அடுத்த நல்லூரைச் சேர்ந்த வைத்தீஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சிலம்பரசன் மனைவியுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
சிலம்பரசன் சுமார் 5 ஏக்கர் குத்தகை நிலம் மற்றும் 2 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். மனைவியின் நகையை அடமானம் வைத்துதான் விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால் அதில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காததால் நகைகளை மீட்காததாக தெரிகிறது. இதனாலும் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்த டிராக்டரை விற்று சிலம்பரசன் விவசாயத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க முயன்றுள்ளார். அப்போது வைத்தீஸ்வரி அந்த பணத்தில் தனது நகைகளை மீட்டுத் தரும்படி சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் வைத்தீஸ்வரை கடுமையாக தாக்கியதோடு, அவர் கழுத்தில் இருந்த துப்பட்டாவை இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுதிணறி வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல் 2 நாட்கள் இறந்த மனைவியின் உடலுடன் படுத்து உறங்கியுள்ளார். 2 நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த சிலம்பரசன், அதற்கும் தைரியம் வராததால் கோவையில் உள்ள நண்பரின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து துர்நாற்றம்ன் வீசியதை அடுத்து, மொட்டை மாடியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் வைத்தீஸ்வரியின் உடல் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து , விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தலைமறைவான மணிகண்டனை தேடி கண்டுபிடித்த போலீசார், அவருடன் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் பவானி, சகோதரர்கள் சிற்றரசு, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் வைத்து விசாரித்து வருகின்றனர்.