Tamil Nadu
ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளில் கணவன் – மனைவி: எங்கு தெரியுமா?

நேற்று ஊரக தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் மறைமுகமாக நடைபெற்ற நிலையில் இதில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது
இந்த நிலையில் ஒரே பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவருமே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி பெற்ற நிலையில், முத்துலட்சுமியின் கணவர் விவேகன் ராஜ், துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கணவனும், மனைவியும், சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவரக தேர்வு பெற்றதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தாலும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
