
செய்திகள்
மீனவர்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளிக் காற்று வீசும்!!
மீனவர்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளிக் காற்று வீசும்!!
தற்போது நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் என்றால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்.
ஏனென்றால் அவர்களால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலைமை உருவாகும், கடல் நீரும் மிக சீற்றத்துடன் காணப்படும். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய மூன்று தினங்களில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இவை மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
