சூறாவளி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

நம் தமிழகத்தில் சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் இன்றைய தினத்தோடு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் இன்றும் நாளையும் பல பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கனமழை

அதோடு மட்டுமில்லாமல் அக்டோபர் 29ம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்காலில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அக்டோபர் 30-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைஅதோடு மட்டுமில்லாமல் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏனென்றால் அக்டோபர் 27 மற்றும் 28ம் தேதியில் வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அக்டோபர் 29, 30 மற்றும் 31 ஆம் தேதியில் மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதியில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளைய தினம் தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இவை வங்கக்கடலில் மத்திய பகுதியில் உருவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment