வங்கக்கடலில் உருவானது அசனி புயல்..!! எங்கெல்லாம் மழை பெய்யும்?

நேற்றைய தினம் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்னும் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது அசனி புயல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் மே 10ஆம் நாள் மாலை வடக்கு ஆந்திரம், ஒடிசா கடற்கரை பகுதியை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 05:30 மணி அளவில் அசனி புயல் விசாகப்பட்டினம் தென்கிழக்கே சுமார் 970 கிலோமீட்டர் தொலைவில் நிலவியது. அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக உருவெடுத்து கிழக்கு மத்திய வங்கக் கடலை அடையும் என்றும் கூறப்படுகிறது.

தீவிர புயல் மே 10ஆம் தேதி மாலை வடக்கு ஆந்திரம், ஒடிசா கடற்கரையை அடையும் என்றும் வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ளது. கடற்கரையை நெருங்கிய பின் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி புயல் திசை திரும்பும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

புயலின் காரணமாக மே 10, 11 ஆகிய நாட்களில் வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment