அடக்கொடுமையே! சாதிமறுப்பு திருமணம் செய்ததால் இப்படியா?… 25 குடும்பங்களுக்கு ஏற்பட்ட அவலம்!

நல்லூர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த 25 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கோயில் தலைக்கட்டி வரி வசூல் செய்யாத விவகாரத்தில் வட்டாட்சியர் தலைமையில் சமரச கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தினரை அந்த ஊர் தலைவர் மற்றும் கிராமத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் மேலும் நல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத திருவிழாவுக்கு தலைக்கட்டு வரி வாங்க மறுப்பு தெரிவித்து வருவதாக கூறி

அந்த பகுதியைச் சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்த வேலு என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பொன்னமராவதி வட்டாட்சியர் தலைமையில் சமாதானம் கூட்டம் நடத்தி சாதி மறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றுள்ள சமாதான கூட்டம் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment