Connect with us

“கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது !!!”

News

“கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது !!!”

c2cf4c8269042a874014d25afa281c71

தற்போது நம் தமிழகத்தில் தொழில் முன்னேற்றமானது அதிகரித்து கொண்டே வருகிறது. இது நம் தமிழகத்தின் மிகவும் மகிழ்ச்சியான தகவலாக காணப்படுகிறது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்றபடி நாடு முன்னேறி செல்வதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது வீடுகளில் உள்ள மனித கழிவுகளை அகற்ற பல பகுதிகளில் மனிதர்கள் பயன்படுவது மிகவும் வேதனை அளிக்கின்ற தகவலாக காணப்படுகிறது.9b0ff9d50ac3c7af0a56a0820753bc14

அதுகுறித்து தற்போது ஐகோர்ட் சில தகவல்களை கூறியுள்ளது. அதன்படி கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த கூடாது என்ற உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழியை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இத்தகைய உத்தரவினை ஹை கோர்ட் கூறியுள்ளது. மேலும் மனிதர்கள் பயன்படுத்தப்படுவதில்லை இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆயினும் அது குறித்து உறுதியாக தகவலை ஹை கோர்ட் எதிர்பார்க்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top