கேரளாவை உலுக்கிய நரபலி விவகாரம்: வெளியான திடுக்கிடும் பின்னணி?

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள் பகவால் சிங் – லைலா தம்பதினர். இவர்கள் பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காக, 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இத்தகைய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 2 பெண்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி என்ர ரஷீத் உட்பட 3 பேரை போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் 2 பெண்களின் உடலையும் 22 துண்டுகளாக வெட்டி, ஷபியின் அறிவுறுத்தலின்படி, நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment