தனது நடிப்பாலும் தனது காமெடி தகவலும் தனது பஞ்ச் டயலாக் காவலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நடிகர் விவேக். மேலும் இவர் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார். திரைப்படத்தில் அதிகமாக சமூகத்துக்கான கருத்துக்களை சொல்லிக்கொண்டே வருவார். அவர் சில வாரங்கள் முன்பாக மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்கிற்கு பல பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் வந்து இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். மேலும் பலரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் இதில் கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது நான்கு விதமான வழக்குகள் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இன்றளவும் அவர் அந்த வழக்கிலிருந்து ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மனு தாக்கல் செய்து கொண்டே வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சென்னை வடபழனி காவல் நிலைய போலீசார் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தடுப்பூசி குறித்து வேண்டும் என்று அவதூறு பரப்ப வில்லை என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.