குற்றவாளிகள் யாராக இருந்தாலும்… ஸ்ரீமதியின் தாய் செல்வி அதிரடி!!

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி வன்முறை வெடித்தது.

அதன் ஒரு பகுதியாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் மாணவியின் தாயார் தமிழக முதல்வரை சந்தித்து தனது மகளுக்கு நீதி வேண்டி கோரிக்கை வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்தாக கூறியுள்ளார்.

அதேபோல் சிபிசிஐடி விசாரணையை மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஸ்ரீ மதியின் இரண்டு உடற்கூறு ஆய்வுகளின் அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

அதோடு காயங்கள் ஏற்பட்டு இருக்கும் சூழலில், எதனால் காயம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.