வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!

கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தியாகவும், கிருஷ்ணஜெயந்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்பதற்காக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய பல அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம்.

kanna
kanna

கண்ணனை விரும்பிய யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். குழந்தை இல்லாதவர்கள் இந்த நாளில் விரதம் இருக்கலாம். தம்பதியர் இருவரும் விரதம் இருந்தால் சீக்கிரமாக பலன் கிடைக்கும். இது குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமான நாள். கண்ணனே குழந்தையாக வந்து வீட்டுத் தொட்டிலில் ஆடக்கூடிய நாள்.

இந்தநாளில் குழந்தை இல்லாதவர்கள் காலை எழுந்ததும் குளித்துவிட்டு பக்கத்தில் உள்ள பெருமாள் கோவில் சென்று நானும் இந்த விரதம் இருக்கிறேன். நீயே எங்களுக்கு வரும் கோகுலாஷ்டமிக்குள் குழந்தையாக கண்ணனாக வந்து பிறக்க வேண்டும் என்று வழிபடுங்கள்.

கோவிலுக்குப் போக முடியாதவர்கள் வீட்டில் கண்ணனின் படம் இருந்தால் அதற்கு முன் விளக்கு ஏற்றி உள்ளன்போடு வேண்டிக்கொள்ளுங்கள்.

காலையில் வழிபாடு பண்ணலாம். காலையில் இருந்து உபவாசமாக இருந்து மாலை நேரத்தில் வழிபாடு பண்ணுவது சிறப்பு.

kannan
kannan

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோகுலாஷ்டமி 19.08.2022 அன்று (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று முழுவதும் அஷ்டமி. காலை என்றால் 9.15 மணி முதல் 10.15 மணி வரை உள்ளது. மதியம் உணவு சமைத்து நீங்கள் வழிபடுவதாக இருந்தால் 12.15 மணிக்கு மேல் 1.15 வரை வழிபடலாம். மாலை என்றால் 6.30 மணி முதல் 7.30 வரை வழிபட உகந்த நேரம்.

உங்களுக்கு மனதுக்குப் பிடித்த கிருஷ்ணரை வைத்து நீங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். உருவமாகவோ, பொம்மையாகவோ, படங்களாகவோ வைத்துக்கொள்ளலாம். அல்லது பெருமாள் இருந்தாலும் வைத்துக்கொள்ளலாம். ஆல் இலையால் அலங்காரம் செய்யலாம்.

நல்ல மலர்களால் அலங்காரம் பண்ணுங்க. நெய்வேத்தியம் இந்த நோன்பில் ரொம்பவே முக்கியம். வரலெட்சுமி நோன்பில் வைத்த அரிசியை பட்சணங்கள் செய்ய பயன்படுத்தலாம். கிருஷ்ணர் சீடை, முருக்கு, அதிரசம் என எதுவேண்டுமானாலும் வைக்கலாம். அதிலும் பால், தயிர், மோர், வெண்ணை, நெய் என்ற 5 பொருள்களும் மிகவும் முக்கியமானது.

அதிலும் நெய் ரொம்ப முக்கியம். பச்சரிசியை நல்லா அரைத்து மாவா வைத்துக்கொண்டு வலது, இடது பாதம் போட வேண்டும். கிருஷ்ணரின் நாமத்தை ஜெபம் பண்ணிக்கொண்டு நாம் கண்ணனே என் வீட்டிற்கு வா என்று அழைக்கலாம். பாதம் போட்டதும் உள்ளே போய் தூப தீப ஆராதனை போட்டு பாதம் போட்டு கண்ணன் என் வீட்டில் எழுந்தருளி விட்டார் என்று நாம் பாதம் போடலாம்.

kaal patham

கிருஷ்ணபாராயணம் தெரிந்தால் சொல்லி வழிபட்டு கிருஷ்ணரை வழிபடலாம். மகாலெட்சுமியோடு கிருஷ்ணர் வாசம் செய்வார்.

குசேலன் கண்ணபரமாத்மாவுக்கு அவலைத் தான் கொடுத்தார். அவலை மாதிரி தான் இடிபட்டு நொந்து வெந்து கிடக்கிறேன் கண்ணா என்றார். அவருக்குப் பிடித்த உணவு அவல். ஒரு பிடி அவலை சர்க்கரை கலந்து வைத்தால் போதும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews