ஆடிப் பெருக்கு அன்று எந்தக்கடவுளை எப்படி வழிபடவேண்டும்? என்னென்ன வாங்க வேண்டும்?

ஆடி மாதம் 18 வரும் புதன்கிழமை (3.8.2022) அன்று வருகிறது. இது அனைத்தும் பெருகக்கூடிய நாள்.

ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்று எதெல்லாம் பெருகணும்னு நினைக்கிறோமோ அதெல்லாம் செய்யலாம். அன்னதானம் செய்யணும்னு நினைக்கிறோமா இன்னைக்கு அன்னதானம் பண்ணுங்க. வீடு கட்ட கல் போடணுமா…போடுங்க…பூமி பூஜை நடத்தணுமா…நடத்துங்க.

Aadi perukku2
Aadi perukku2

கார், பைக் வாங்கணுமா வாங்குங்க. எதை நினைச்சி செய்கிறோமா அது பெருகக்கூடிய நாள் இது. அதனால் தான் விவசாயிகள் இந்த நாளைப் பார்த்து விதை விதைப்பார்கள். விதை பெருகணும். மகிழ்ச்சி பெருகணும். செல்வம் பெருகணும். ஆடி மாசம் அம்பாளை வணங்குவதால் அருள் கண்டிப்பாக கிடைக்கும். ஆடிப்பெருக்கு அன்று அம்பாளைக் கங்கா பவானியாக வழிபட வேண்டும்.

ஒரு கலசத்தில் சாதாரணமாக உங்க வீட்டுத்தண்ணீர் எடுத்துக்கோங்க. அதுக்கூட கொஞ்சம் மஞ்சள் தூளை சேருங்க. அம்மா கங்கா தேவி காவிரி தாயே இந்தக்கலசத்தில் நீ எழுந்தருளணும்னு பிரார்த்தனை பண்ணிக்கோங்க. அதுக்கு அப்புறம் அதில கொஞ்சம் பூக்கள் சேர்த்துக்கோங்க. எந்தப் பூவாக வேணும்னாலும் இருக்கலாம்.

அப்புறம் நைவேத்தியத்துக்கு நாம வாழைப்பழம், நாவல்பழம், வெத்தலைப்பாக்கு, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை வைக்கலாம். காப்பரிசி, ஒரு காதோலைக் கருகமணி, வெத்தலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம் இதை எல்லாத்தையும் வச்சி தாலி பிரிச்சிக் கோர்க்கக்கூடிய வழக்கம் உள்ளவங்க அந்தத் தாலிக்கயிற்றையும் அதில வச்சி வணங்கணும். வெத்தலப்பாக்கு வச்சி திருமாங்கல்யத்தை வச்சிக் கும்பிடலாம்.

Aadi 18
Aadi 18

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை இந்த வழிபாட்டை செய்யலாம். அப்புறமா 9.15 மணி முதல் 10.15 மணி வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மதியத்திற்குள் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. காவேரி தாய்க்கு நன்றி சொல்லி வழிபடணும். கண்டிப்பா நாட்டுக்கு மழை வளம் வேணும். அது அளவோடு இருக்கணும். அந்த மழையால் மக்கள் செழிக்கணும்.

அதனால நாங்களும் செழிக்கணும்னு வேண்டணும். கிணறு, மோட்டார், பம்ப் இருந்தால் அதுக்கும் பூஜை செய்ய வேண்டும். அதன்பிறகு அந்தத் தண்ணீரை தீர்த்தமாகக் கொடுத்து எல்லோரையும் பருகச் செய்யலாம். மிச்சம் உள்ள நீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம்.

எந்த வியாபாரம் வேணும்னாலும் தொடங்கலாம். வசதி உள்ளவங்க தங்கம், வெள்ளி வாங்கலாம். வசதி இல்லாதவங்க ஒரு பாக்கெட் மஞ்சள், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு முழம் மல்லிகைப்பூ, வெத்தலைப்பாக்கு, பழம் வாங்கி சாமிக்கு நைவேத்தியம் வச்சிக் கும்பிடுங்க. மஞ்சள் உப்பை விட மகத்தான பொருள்கள் எதுவுமில்லை. அதனால் இதை வாங்க மறந்துவிடாதீர்கள்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.