வருசத்துக்கு 10 லட்சம் வருமானம் வந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. எப்படி?

சென்னை: ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் நாம் வருமான வரியை சேமிக்க முடியும்.

மாத சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி என்பது பழைய திட்டத்தின் படி ஐந்து லட்சத்திற்கு மேலும் புதிய திட்டத்தின்படி 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேலும் இருநதால் வருமான வரி கட்ட வேண்டியது அவசியம் ஆகும். இந்த வரிகளை மாதம் மாதம் உங்கள் சம்பளத்தில் நிறுவனங்கள் பிடித்து வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள் . அதேநேரம் சேமிப்பு, மருத்துவம், காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்தால் உங்களுக்கு பிடிக்கப்பட்ட வருமான வரியை திரும்ப பெறலாம்.

புதிய வருமான வரி முறையில் நேரடியாக வரியை கட்ட வேண்டியது அவசியம் ஆகும். சுமார் 7 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய வரம் ஆகும். அதேநேரம் பழைய வரிமுறையில் மிகப்பெரிய நன்மைகள் உள்ளது. பழைய வரிமுறையினை தேர்வு செய்தால் ஆண்டுக்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும்.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் வரி சேமிப்பு திட்டங்களில்முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் பழைய வரி முறை மூலமாக மட்டுமே நீங்கள் வருமான வரியை கிளைம் செய்து சேமிக்க முடியும். புதிய வரிமுறைகளில் வாய்ப்புகள் இல்லை.

10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி சேமிப்புக்கு எப்படி முதலீடு செய்தால் கணிசமான பணத்தை சேமிக்கலாம் என்பதையும் . உங்களது வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் படி வருமான வரிக்கழிவுகளை கிளைம் செய்ய என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.

வருமான வரி செல்லுத்துவோருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் 50,000 ரூபாய் நிரந்தமாக கழிக்கப்படும். அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் பிரிவு 80C யின் கீழ் குழந்தைகளின் கல்வி கட்டணம், எல்ஐசி, போஸ்ட் ஆபிஸ் திட்ட முதலீடுகள், பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் உள்பட அனைத்து சேமிப்புகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையில் கிளைம் செய்து கொள்ள முடியும்.

அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80CCD (1B) -இன் கீழ் மத்திய அரசின் நேஷனல் பென்ஷன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து ரூ.50,000 ரூபாய் கிளைம் செய்து கொள்ளலாம். அடுத்தாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80D -இன் கீழ் உங்களுக்கோ, உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்களுக்கு 25,000 ரூபாய் வரை கிளைம் செய்து கொள்ள முடியும். அதேநேரம் உங்கள் வயதான பெற்றோர்களுக்கு பெற்றோர்களின் மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்க்கு 50,000 வரையில் கிளைம் அனுமதிக்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்போர் 80GG பிரிவில் வரி விலக்கு பெறலாம். நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு இந்த பிரிவு பொருந்தும். உங்கள் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் நீங்கள் இருந்தால் கூட இந்த பிரிவில் விலக்கு கோரலாம். ஒரு லட்சம் வரை வீட்டு உரிமையாளர் பான் எண் தேவையில்லை.. அதற்கு மேல் என்றால் அவரது பான் எண் குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 24(b) இன் கீழ் வீட்டு கடனுக்கான வட்டிக்கு 2,00,000 ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு கிளைம் செய்ய அனும அளிக்கிறது மத்திய அரசு. மேற்கண்ட விஷயங்களில் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இன்னும் சரியாக விளக்குவது என்றால், லீவ் டிராவல் அலவன்ஸ், டெலிபோன் பில் ரீஇம்பர்ஸ்மெண்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் போன்றவற்றில் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.

அதோடு அரேசே ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்களாக 50000 வரை தருவதால், மொத்தமாக மேற்கண்ட எல்லா முதலீடுகள் மூலம் வருமானத்தை 5 லட்ச ரூபாய்க்கு கீழ் குறைவாக நீங்கள் காட்ட வேண்டும். மேலே சொன்னபடி சரியாக செய்தால் உங்களது வருமானம் 4,96,500 ரூபாயாக இருக்கும். இப்போது நீங்கள் இந்த வருமானத்திற்கு எந்த ஒரு வரியையும் செலுத்த தேவையில்லை. முழு தகவல்கள் மற்றும் ஆலோசனைக்கு ஆடிட்டர்களை கேட்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews