முல்லைப்பெரியாறு அணை எப்படி திறக்கப்பட்டது? தமிழ்நாடு இசைவோடா? கேரளா தனியாகவா?

சில நாட்களாகவே தமிழ்நாடு கேரளா அரசுக்கு இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது முல்லைப் பெரியாறு அணை.  கேரளாவில் பெய்த கனமழையால் அங்கு பல மாவட்டங்களில் மழை நீர் தேங்கியது. கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி வதந்தி பரப்ப தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் உச்சநீதிமன்றத்தில் நிகழ்த்தியது.முல்லை பெரியாறு அணை

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு முல்லை பெரியாறு அணை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் முன்னே மதகுகளிலிருந்து கேரளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கேரள அமைச்சர்கள், இடுக்கி ஆட்சியர் முன்னிலையில் திறந்ததாகவும், இந்த அணையில் இருந்து  நீர் திறந்தபோது தமிழ்நாடு அதிகாரிகள் இருந்ததாகவும், பத்திரிக்கையில் செய்திகள் வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ்சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில் கேரளத்துக்கு நீர் திறக்கப்பட்டது ஏற்கமுடியாது என்று விவசாயிகள் அமைப்பினர் கூறுவதாகவும் ஓபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்  உரிமை பறிபோய் உள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் என்று ஓபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இசையுடன் நீர் திறக்கப்பட்டதா? அல்லது கேரள அரசு தன்னிச்சையாக திறந்ததா? என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment