ஹோட்டல் ருசியில் வீட்டில் எளிமையாக குஸ்கா செய்வது எப்படி?

ஹோட்டலில் குஸ்கா ருசியாக சாப்பிட்டு இருப்போம். வீட்டில் மட்டும் ஏன் அந்த ருசி வரவில்லை என நாம் சிரமப்பட்டு சமையல் செய்வோம். எல்லாவற்றிலும் ஒரு சில நுணுக்கங்கள் உண்டு. அதைச் செய்தாலே போதும். அந்த ருசியை வீட்டில் கொண்டு வந்து விடலாம். என்ன ஆரம்பிக்கலாங்களா…?

தேவையான பொருள்கள்

பாசுமதி அரிசி – 300 கி
பாமாயில் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை – தேவைக்கு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
புதினா, மல்லி தழை – தேவைக்கு
காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் – அரை டேபிள் ஸ்பூன்

செய்வது எப்படி?

பாசுமதி அரிசியை நல்லா கழுவி விட்டு 20 நிமிடத்துக்கு ஊற விடுங்க. அப்போ தான் நாம செய்யும் போது அரிசி உடையாம நீளமாக வரும். குக்கரை அடுப்பில் வைத்து நல்லா சூடானதும் 3 டேபிள் ஸ்பூன் பாமாயில் ஊற்றிக் காயவிடுங்க. 3 டேபிள் ஸ்பூன் நெய் சேருங்க. இரண்டும் நல்லா சூடானதும் 2 பட்டையை சேருங்க. 6 ஏலக்காய், 6 கிராம்பு, ஒரு பிரியாணி இலையை சேருங்க.

எல்லாமே நல்லா பொரிந்ததும் பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேருங்க. நல்லா பொன்னிறமாகும் வரை வதக்குங்க. அப்போ தான் டேஸ்டா இருக்கும். அப்புறம் 4 பச்சை மிளகாயை நடுவில கீறிட்டு சேருங்க. இப்போ 2 டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது நல்லா சேருங்க. இப்போ நல்லா வதக்குங்க. இப்போ அடுப்பில் தீயை நல்லா குறைத்துவிட்டு கொஞ்சம் உப்பு சேருங்க. இதனால் பாத்திரத்தில் பிடிக்காது.

2 தக்காளியை நல்லா கட் செய்து அதையும் கூட சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போ ஒரு கைப்பிடி நறுக்கிய மல்லி இலையையும், ஒரு கைப்பிடி நறுக்கிய புதினாவையும் சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போ ஒரு கைப்பிடி காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நல்லா கிளறி விடுங்க. தயிர் 2 டீஸ்பூன் சேருங்க. நல்லா கலக்கிவிடுங்க. அப்போ தான் நமக்கு சாதம் மென்மையாக வரும். அடுத்து பாதி எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து விடுங்க.

kuska3
kuska

இப்போ தண்ணீரை சேர்க்க வேண்டும். இது ஒரு கிளாஸ் அரிசி என்றால் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் என்ற அளவில் இருக்க வேண்டும். இப்போ அரிசி கொஞ்சமும் குலையாமல் நல்லா உதிரியாக வரும். இப்போ தேவைக்கேற்ப உப்பு சேருங்க. இப்போ தண்ணீர் நல்லா கொதித்ததும் அரிசியைப் போடுங்க. இப்போ நல்லா கிளறி விடுங்க. இதற்கு விசில் தேவையில்லை. இப்போ நாம் தம் வைத்து குஸ்கா செய்யலாம்.

அதற்கு குக்கரை ஒரு மூடியால் மூடி விடுங்க. அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து நல்லா சூடு பண்ணுங்க. அதன் மேல் குக்கரை வைங்க. மூடி இறுகலாக இருக்க அதன் மேல் ஒரு கல்லை வைத்து விடுங்க. பத்து நிமிடத்தில் வெந்து விடும். இப்போது அடுப்பை அணைத்து விடுங்க.

kuska 1
kuska

குக்கரை உடனே திறந்து விடாதீர்கள். ஒரு பத்து நிமிடம் இந்த சூட்டிலேயே தோசைக்கல் மீது இருக்கட்டும். இப்போது திறந்து பார்க்கும் போது தனித்தனி அரிசியாக வெந்து பார்க்கவே அழகாக இருக்கும். குக்கரிலும் ஒரு பருக்கைக் கூட ஒட்டாது. என்ன செய்து ஜமாய்க்கலாமா?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews