சகல உணவுகளுக்கும் பொருத்தமான ஸ்பெஷல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

இன்று மட்டன் கூட அவ்வளவாக வீடுகளில் வைப்பதில்லை. ஆனால் சிக்கன் வைக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு சிக்கன் குழம்பு ஸ்பெஷலாக மாறிவிட்டது.

ஆனால் அதை முறைப்படி எவ்வாறு செய்வது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்காக சிக்கன் குழம்பை சுவையாக செய்யும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

சிக்கன் – அரை கிலோ
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 4 பல்
இஞ்சி – 2 துண்டு
மல்லி இழை – கால் கப் (பொடிதாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கு

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து நறுக்கி வைத்த சிக்கன் துண்டுகளை தண்ணீரில் கழுவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர்
மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் கழுவி வைத்த சிக்கனுடன் கலந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் இப்படி ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணையை ஊற்றி காய விடுங்கள்.

2 துண்டு பட்டை, ஒரு நட்சத்திர சோம்பு, 3 கிராம்பு, 2 ஏலக்காய், 6 வர மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு சிறிய துண்டு ஜாதிக்காய், ஒரு ஜாதிப்பூ ஆகியவற்றைப் போட்டு அளவான தீயில் வதக்க வேண்டும். இப்போது இன்னும் கொஞ்சம் தீயைக் குறைத்துக் கொண்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா போட்டு 30 வினாடிகள் கருகாமல் வறுத்தெடுக்க வேண்டும்.

இந்த மசாலா குழம்புக்குத் தேவையானது. இதை எடுத்து ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலியை எடுத்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணை ஊற்றி காயவிடுங்கள். 100 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி அதனுடன் போடுங்கள்.

thenkai thuruval
thenkai thuruval

இதை சிவக்கும் அளவுக்கு வதக்குங்கள். இப்போது கால் கப் அளவுக்கு துருவிய தேங்காயைப் போட்டு நல்லா வதக்குங்கள். இது நல்லா ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வாணலியில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணை, 2 டீஸ்பூன் நெய் விட்டு காயவிடுங்கள். இப்போது 4 பல் பூண்டு பொடிதாக நறுக்கியது, ஒரு பெரிய வெங்காயம் பொடிதாக நறுக்கியது ஆகியவற்றை போட்டு சிவந்து வரும் அளவிற்கு வதக்குங்கள். இதனுடன் ஏற்கனவே மசாலாவில் ஊற வைத்த சிக்கனைப் போட்டு நன்றாக வதக்குங்கள். இப்போது வறுத்து அரைத்து வைத்த மசாலாவை ஊற்றுங்கள்.

chicken with masala
chicken with masala

நன்றாக கிளறி விடுங்க. மிக்சி ஜாரை அலசி ஒரு அரை கப் அளவு தண்ணீர் சேருங்கள். இப்போது தேவைக்கேற்ப உப்பு சேருங்கள். 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இதனுடன் சிறிய தக்காளியைப் பொடிதாக நறுக்கி அதனுடன் கலந்து கிளறி விடுங்கள். தீயைக் குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடுங்கள். அவ்வப்போது கிளறி விடுங்கள்.

20 நிமிடத்திற்கு பிறகு சிக்கன் நல்லா வெந்து விடும். இப்போது அடுப்பை ஆப் செய்து விட்டு பொடிதாக நறுக்கிய மல்லி இலையைச் சேர்த்து இறக்கி விடலாம். இந்த டேஸ்ட்டை ஒரு தடவை நீங்கள் பார்த்தால், உங்களை விடாது. தொடர்ந்து இதை வாராவாரம் வீக் எண்டுகளில் செய்து குடும்பத்தை குதூகலப்படுத்தலாம். இதை சாதம், சப்பாத்தி, பரோட்டோ, இட்லி, தோசை என சகல உணவுகளுக்கும் கலந்து அடிக்கலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews