தீபாவளிக்கு இந்த இனிப்பு மட்டும் செய்தால் போதும்…ரொம்ப ஈசி…அவ்ளோ ருசி..!

லட்டு பிடிக்காத மனிதர்களே இல்லை எனலாம். எந்த ஒரு விழாவென்றாலும் அதில் முதலிடம் பிடிப்பது லட்டு தான். அதிலும் இந்த மோதிச்சுர் லட்டு செம ரூசியாக இருக்கும். ரொம்பவே சாஃப்டாக இருப்பது தான் இதன் சிறப்பம்சம்.

இனிப்பில்லாமல் தீபாவளியா என்று எல்லோரும் சொல்வதுண்டு. எத்தனை இனிப்புகள் செய்தாலும் லட்டுக்கு ஈடாகாது. அதிலும் இந்த மோதி லட்டு டாப் தான்.

இதை நாம் கடைகளில் தான் பார்த்து வாங்கி சுவைத்திருப்போம். வீட்டில் செய்ய முடியாதா என்று கேட்பவர்களுக்கு ரொம்பவே ஈசியாக செய்யலாம். எப்படி என்று பார்க்கலாமா..

தேவையான பொருள்கள்

sugar
sugar

கடலை மாவு – 1 கப்
உப்பு – கால் ஸ்பூன்
ஆரஞ்சு கலர் – சிறிது
நெய் – 3 ஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – முக்கால் கப் தண்ணீர்
ஆரஞ்சு கலர் பொடி – சிறிது
முந்திரி பருப்பு – தேவைக்கு
ஏலக்காய் – தேவைக்கு

எப்படி செய்வது?

கடலை மாவு, உப்பு, ஆரஞ்சு கலர் மூன்றையும் சேர்த்து நல்லா கரைச்சிக்கோங்க. அதை தனியாக எடுத்து வைங்க. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையைக் காய விடுங்க. பூந்தி தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை விட்டு கொதிக்கும் எண்ணையில் தட்ட வேண்டும். சில்வர் வடிகட்டியில் அதை எடுத்து எண்ணையை வடிகட்டுங்க. இப்போ பூந்தி குட்டி குட்டியாகத் தயார் ஆகிவிடும்.

poonthi1
poonthi1

இப்போது தனியாக சர்க்கரை பாகு ரெடி பண்ணனும். ஒரு கப் அளவு சர்க்கரை, முக்கால் கப் தண்ணீர், கொஞ்சம் ஆரஞ்சு கலர் பொடி சேர்த்து வாணலியில் விட்டு கொதிக்க விடுங்க. இப்போது ஏற்கனவே பொரித்து வைத்த பூந்தியை அதில் போடுங்க.

இப்போடு அடுப்பை சிம்மில் தான் வைக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து நல்லா கிளறி விடுங்க. பத்து நிமிஷம் இப்படி கொதிக்க வேண்டும். அப்போது தான் பூந்தி மெதுவாக இருக்கும்.

இப்போது பொடியாக கட் செய்த முந்திரி பருப்பை சேருங்க. அடுத்து 3 ஸ்பூன் நெய் சேருங்க. ஏலக்காய் சிறிதளவு சேர்த்து நல்லா கலந்து விடுங்க. இப்போ சூடாக இருப்பதால் 15 நிமிஷம் ஆற விடுங்க.

இப்போது உங்களுக்கு லட்டு என்ன சைஸ்க்கு தேவையோ அது போல சின்னதா உருட்டி இப்படி அழகா லட்டு செய்யலாம். இது தான் மோதிச்சுர் லட்டு. உங்க செல்லக்குட்டீஸ்களுக்கு இதைத் தீபாவளி பலகாரமா செய்து கொடுத்து அசத்துங்க.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews