எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!

எந்தக் கடவுளாக இருந்தாலும் நாம் முதலில் நினைத்துக் கும்பிடுவது நோய் நொடியில்லாத வாழ்க்கையைத் தான். இது மட்டும் நம் உடலில் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்து விடலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். இதற்கு கடவுளின் அருளும் கண்டிப்பாகத் தேவை. குறிப்பாக நாம் கருடாழ்வரை வணங்கும்போது கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லலாம்.

ராகு, கேது என்ற இரு கிரகங்களால தான் நம்ம கஷ்டத்திற்கு ஆளாகிறோம். இந்த கருட மந்திரத்தைச் சொல்லும்போது வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கும். கஷ்டம் குறையும். எந்த வியாதியானாலும் குணமாகி விடும். கொடுத்த கடன் நம்மை வந்து அடையும்.

karudalvar2
karudalvar2

இந்த கருடபகவான் எப்படிப்பட்டவர் தெரியுமா? இவரை வழிபடுகிற பக்தர்களுக்கு தன்னுடைய சக்தியில் இருந்து ஒரு பங்கை கொடுத்து விடுவார். குறைந்தது 6 மாதம் வழி பட்டு வரும் பக்தர்களுக்கு இது நிச்சயம் கிடைக்கும். இதை சாஸ்திரமே சொல்கிறது.

கருட ஸ்லோகத்தை முதலில் சொல்லி வர வேண்டும்.

கருட ஸ்லோகம்

அம்ருத கலச ஹஸ்தம்
காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம்
வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸ_லப பஷை:
தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம்
சிந்தயேத் பஷிராஜம்.

எப்பேர்ப்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மரண பயமே நீங்கும். 1008 முறை விபூதியில் ஜெபம் செய்து இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் விஷக்கடி கூட நம்மை விட்டு நீங்கி விடும்.

கருட காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ_வர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

இதன் பொருள் என்னவென்றால், பரம புருஷனை அறிந்து கொள்வோம். ஸ்வர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருடபகவானான அவர் நம்மைக் காத்து அருள் செய்வார்.

karudalvar2
karudalvar2

இப்போது நாம் பார்க்க இருப்பது கருட பிரயோக மந்திரம். இது ரொம்ப ரொம்ப ரகசியமான மந்திரம். இதற்கு பலவித சக்திகள் உண்டு.

ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹ_ பராக்ரமாய
பஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய நமஹ

இந்த மந்திரத்தை 3 தடவை சொல்லிட்டு வந்தால் போதும். தொடர்ந்து சொல்லி வந்தால் போதும். உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழியும்.

karuda bhagavan
karuda bhagavan

எந்த வித நோயாக இருந்தாலும் கருடபகவான் அதை நீக்கி விடுவார். கொடுத்த கடன் எவ்வளவாக இருந்தாலும் அது திருப்பி வந்து நம்மை சேர்ந்து விடும். இதுதான் இந்த மந்திரத்தின் சக்தி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...