சுவையான ஆப்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும்… செய்வீர்களா…?!

ஆப்பம் என்றாலே அது எல்லோருக்கும் பிடித்து விடும். அதற்கு ஏற்ற சைடிஷ் இருந்தால் இன்னும் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.

பொதுவாக ஆப்பத்திற்கான மாவை எப்படி அரைப்பது? சோடா உப்பு சேர்க்காமல் ஆப்பம் செய்ய முடியுமா? எளிதில் புளிக்கச் செய்ய அதற்கு என்ன செய்ய வேண்டும்? மெதுவான ஆப்பமாக இருக்க என்ன சேர்க்க வேண்டும்? அதை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

ulunthu
ulunthu

இட்லி அரிசி – ஒரு கப்

உளுந்து – ஒரு கப்

பச்சரிசி – ஒரு கப்

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

எப்படி செய்வது?

முதலில் நாம் செய்ய வேண்டியது இதுதான். அதாவது இட்லி அரிசியையும், பச்சரிசியையும் எடுத்து நன்கு தண்ணீரில் அலச வேண்டும்.

பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு வெந்தயம், உளுந்து சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாகத் தான் ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரமாவாவது ஊற வேண்டும்.

அரைக்கும்போது அவற்றை ஒன்றாகப் போட்டு அரைக்கலாம். முதலில் கிரைண்டரில் உளுந்தை மட்டும் போடுங்கள். அதை அரைக்கும் போது பொங்க பொங்க அரைக்க வேண்டும். அப்போது இடையிடையே தண்ணீரை சேர்த்து விடுங்க. உளுந்து ஒரு முக்கால் பங்கு அரைந்ததும் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

Aappam maavu
Aappam maavu

நல்லா நைஸா வரும் வரை மாவை அரைக்க வேண்டும். அப்போது தான் ஆப்பம் மெத்தைப் போன்று மெதுவாக சாப்பிட சுவையாக இருக்கும். நல்லா அரைத்த பிறகு தேவைக்கேற்ப உப்பை சேருங்க. 8 மணி நேரமாவது மாவை ஊறவைங்க. அப்போது தான் மாவு நல்லா புளிக்கும்.

இப்போது மாவை ஆப்பச்சட்டியில் ஊற்றி எடுங்க. அடுப்பில் தீயைக் குறைத்து வைங்க. ஆப்பம் கருகி விடாமல் எடுப்பது முக்கியம். மாவை ஊற்றி மூடியைக் கொண்டு மூடிவிடுங்க. சிறிது நேரம் கழித்து எடுத்து விடுங்க. ஆப்பத்தை திருப்பிப் போடக்கூடாது. அப்படியே எடுத்து விட வேண்டியதுதான். இப்போது நீங்கள் நினைத்த மாதிரியே சுவையான ஆப்பம் தயார்.

Appam
Aappam

இதற்கு ஏற்ற சாம்பார், தேங்காய் சட்னி, உளுந்த வடை ஆகியவற்றை செய்து சாப்பிடலாம். அல்லது தேங்காய் பாலுடன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம். செம டேஸ்ட்டாக இருக்கும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.