வீட்டிலிருந்த படியே வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?

கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021-ன் கீழ், அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கேட்டுக்கொள்கிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்ப்பது, வாக்காளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பது மற்றும் ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்லது பல தொகுதிகளில் பதிவு செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்ப்பது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

Aadhaar Card Link with Voter Card

வாக்காளர் அடையாளம் அல்லது தேர்தல் புகைப்பட அடையாள அட்டையுடன் (EPIC) ஆதார் அட்டையை இணைக்க ECI இன்னும் கட்டாயப்படுத்தவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதார் எண் வழங்கப்படாத பட்சத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போதுள்ள வாக்காளர்களின் பெயர் நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்போது, ​​உங்கள் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆன்லைனில் இணைக்க விரும்பினால், தேர்தல் ஆணையம் சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளது. உங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான படிப்படியான வழிகாட்டியைப் பாருங்கள்.

link aadhar with voter id

படி 1: Google Play Store and Apple App Store-லிருந்து Voter Helpline App செயலியைப் பதிவிறக்கவும்.

படி 2: செயலியை திறந்து, I Agree என்பதை கிளிக் செய்து, Next என்பதைத் கிளிக் செய்யவும்.

படி 3: பின்னர் Voter Registration என்பதைத் கிளிக் செய்யவும்.

படி 4: Electoral Authentication Form(Form 6B) கிளிக் செய்து திறக்கவும்.

தூங்கும் போது செல்போனை தலை அருகில் வைத்து தூங்க கூடாது! காரணம் தெரியுமா?

படி 5: Lets Start என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 6: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு அனுப்பு OTP என்பதை கிளிக் செய்யவும்.

படி 7: நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு click on Verify என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 8: Yes I Have Voter ID என்பதைக் கிளிக் செய்து, Next என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 9: உங்கள் Voter ID number (EPIC) உள்ளிட்டு, உங்கள் state தேர்ந்தெடுத்து Fetch details என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 10: Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

படி 11: ஆதார் எண், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் your place of authentication நிரப்பி Done என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 12: Form 6B மாதிரிக்காட்சி page திறக்கும். உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, உங்கள் படிவம் 6B இன் Confirm என்பதைக் கிளிக் செய்யவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment