மனதில் உள்ள இருள் அகல விளக்கேற்றும்போது இதைப் பின்பற்றலாமே….! இனி செய்வீர்களா?

விளக்கம் என்ற சொல்லில் இருந்து வந்தது தான் விளக்கு. விளக்கு ஏற்றுகின்ற போது பிறரின் குறைகளை நினைக்காதீர்கள். நமக்கு அந்தக் குறை இருக்கிறதா என்று பாருங்கள்.

மனதில் உள்ள குழப்பங்கள், துன்பங்கள், துக்கங்கள் எல்லாம் நீங்கிவிடும். அதற்கு இதை மட்டும் செய்தால் போதும். எப்போதெல்லாம் உங்கள் மனம் சஞ்சலப்படுகிறதோ, பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடுகிறீர்களோ அப்போது உங்களுக்கு உதவுவது தான் இந்த அகல் விளக்கு.

agal 1
agal

நெய்யால் ஏற்ற வேண்டும். தீபம் சுடர் விடுகின்ற போது நாம் கவனிக்க வேண்டும். அதில் உள்ள நிறங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். அடியில் கருப்பு நிறம் இருக்கும். நீல நிறம் இருக்கும். ஆரஞ்சு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் இருக்கும்.

விளக்கானது ஒரு இடத்திலிருந்து துவங்கி அகலமாக போய் குறுகி ஒரு பாயிண்டில் போய் நிற்கும். இது கூர்மையாகப் போய் நிற்கும்.

உங்கள் மனதில் தேங்கக்கூடிய கழிகளாகிய துன்பங்கள் எல்லாம் அடியில் கசடு போல் தேங்கி எரியும். அதைக் குச்சியால் தட்டி விட்டால் அந்தக் கருப்பு கறைகள் கீழே விழுந்து விடும். அப்போது அது பிரகாசமாகச் சுடர் விடும்.

அதன்பின்னர் உங்களது நியாயமான கோரிக்கைகளை வைக்கலாம். படிப்பு, வேலை, திருமணத் தடை, வியாபாரம், குற்றம் குறைகள் நீங்கி குணங்களைப் பெருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மனதிற்குள்ளேயே தொடர்ந்து உருப்பெற வைக்க வேண்டும். இதன் மூலமாக சூரிய, சந்திர சுடர்கள் உங்கள் மனதில் பிரகாசமாக ஒளிரும்.

lighting1
lighting1

மனச்சுடரைத் தூண்டும் என்கிறார் ஆழ்வார். வெளியே உள்ள சுடர் மனதிலே உள்ள இருட்டை நீக்க வேண்டும். மனதில் விளக்கு எரிய வேண்டும். இது ஒரு தியானம். கலை. வித்தை. வினைச்சுடரைத் தவிர்த்து மனச்சுடரைத் தூண்டும். பாபத்தை நீக்கி உங்களுக்கு சேரக்கூடாததை எல்லாம் அவித்து விட்டு மனச்சுடரை பிரகாசிக்கச் செய்யும்.

உங்கள் இஷ்ட தெய்வ நாம ஜெபத்தோடு இணைத்தக் கொள்ளலாம். மகாவிஷ்ணு, சிவபெருமான் ஆகியோரில் ஏதாவது உங்களுக்குப் பிடித்த தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம். சிகப்பும் ஆரஞ்சும் கலந்த தீபத்தில் சுடர்விட்டு பிரகாசிக்கக்கூடிய சிவபெருமானைப் பார்க்கலாம்.

அது உங்கள் மனதில் பிரகாசிக்கும். இது ஒரு அலைக்கற்றையை உடல் முழுவதும் ஏற்படுத்தும். பரபரப்பான உணர்ச்சிகள் அகலும்.

Agal2
Agal2

மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படும். மனச்சுடரானது உங்கள் உள்ளத்தில் இருந்து பிரகாசிக்கும். இதுதான் விளக்கேற்றுவதில் உள்ள சூட்சமம். இது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள ரகசியமான விஷயம். இதை முறைப்படி நீங்கள் செய்து வந்தால் உங்கள் எண்ணங்கள் அதிகபட்சமாக 48 நாள்களில் பூர்த்தியாகிவிடும்.

இதை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இரண்டாவது நீங்கள் நிறைவேறத்தக்க வகையில் நியாயமான விஷயமாக அது இருக்க வேண்டும். திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றப்படுவதற்கான தாத்பரியமும் இதுதான். அதனால் தான் அந்த மாதம் முழுவதுமே வீட்டு வாசல்களில் விளக்கேற்றி நல்லெண்ணத்தைப் பரவச் செய்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.