உங்கள் பிள்ளைகளிடம் கவனிக்கும் திறனை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகள் தங்களின் சிறு வயதில் இருந்தே ஒவ்வொரு பொருளையும் கவனிக்க தொடங்குவார்கள். தங்களை சுற்றி உள்ள பொருட்களை கவனித்து அது என்ன? ஏன்? எப்படி? என்று பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். குழந்தைகளுக்கு கவனிக்கும் திறன் என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைய வேண்டும். அப்பொழுதுதான் படிப்பு, விளையாட்டு, வேலை என அவர்கள் விருப்பப்பட்ட துறைகளில் சாதிக்க முடியும். எந்த வேலையை செய்தாலும் கவனச் சிதறல்கள் இல்லாமல் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

concentration 4

இப்படி கவனச் சிதறல்கள் ஏதும் இல்லாமல் ஒரு வேலையை கவனத்துடன், மன ஒருநிலைப்பாட்டுடன் செய்தல் மிகவும் அவசியம். எனவே கவனிக்கும் திறனை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. குழந்தைகளுக்கு மிகப்பெரிய வேலைகளை கொடுக்கும் பொழுது அதை பிரித்து சிறிய சிறிய வேலைகளாக கொடுக்க வேண்டும். மிகப்பெரிய வேலையை கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு மலைப்பாகத் தோன்றலாம் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகலாம் எனவே சிறு சிறு வேலைகளாக பிரித்து கொடுக்க வேண்டும்.

concentration 1

2. குழந்தைகள் ஒரு வேலையை முடித்து அடுத்த வேலையை செய்ய அவர்களுக்கு போதுமான இடைவெளி கொடுக்க வேண்டும். அடுத்தடுத்து தொடர்ந்து வேலைகளை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. அது அவர்களுக்கு சோர்வை தந்து கவனச்சிதறலை அதிகரிக்கச் செய்யும்.

3. போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் கவனிக்கும் திறன் குறைவுபடும். அதிகமான இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். பால், மீன், முட்டை, இறைச்சி, ஒமேகா த்ரீ அமிலம் நிறைந்த உணவு போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் இவை கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்திடும். ஹெல்த் ட்ரிங்க், கஃபைன் உள்ள உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். போதுமான அளவு தண்ணீர் பருகுதல் மிகவும் முக்கியம்.

ஞாபக மறதி அதிகம் இருக்கிறதா நினைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுப் பொருட்களை உங்க சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கோங்க!

4. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே வீட்டுப்பாடம் செய்வது, பாடல் கேட்டபடியே எழுதுவது போன்றவற்றை செய்ய அனுமதிக்க வேண்டாம். படிக்கும் பொழுது சமூக வலைத்தளங்களில் இருப்பதையோ, குறுஞ்செய்திகள் பரிமாறுவதையோ அனுமதிக்கக் கூடாது. படிக்கும் பொழுது முழு கவனமும் படிப்பில் மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

concentration 2

5. மூளை வளர்ச்சிக்கு உதவும் விளையாட்டுக்களை விளையாட பழக்கப்படுத்துங்கள். புதிர்களை தீர்த்தல், குறுக்கெழுத்து விளையாட்டு, தொடர் வரிசையில் அடுக்குதல் போன்ற சிந்தனையை தூண்டும் வகையான விளையாட்டுகளை விளையாடச் செய்யுங்கள்.

6. தினமும் படிப்பதற்கான நேரத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரே மாதிரியான நேரத்தில் தினமும் படிக்கும் பொழுது மூளை அந்த நேரத்திற்கு பழக்கமாகிவிடும். படிப்பதற்கு மூளை இயல்பாகவே தயாராகிவிடும்.

concentration

7. கவனிக்கும் திறனை அதிகரிக்க தூக்கம் மிகவும் அவசியம். நல்ல ஆழ்ந்த தூக்கம் குழந்தைகளுக்கு செய்யும் வேலையில் நல்ல கவனத்தை தரும். மதிய வேளைகளிலோ அல்லது பள்ளி முடித்து வந்த பின்னரோ 20 முதல் 30 நிமிடங்கள் எடுக்கும் பவர் நாப் எனப்படும் தூக்கம் நல்ல சிந்தனைக்கும் கவனத்திற்கும் வழி வகுக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews