இறைவனுடன் பேச முடியுமா

இறைவனுடன் பேச முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல முடியும். இறைசக்தி என்பது உயரிய சக்தி. சினிமாக்களில் காண்பிப்பது போல் மகனே என்று நேரில் தோன்றி எல்லாம் உங்களிடம் பேசுவது கடினம். ஆனால் பல மகான்களிடம் இறைவன் நேரிலேயே தோன்றி இருக்கிறார். இந்த கலியுகத்திலும் கடந்த 20ம் நூற்றாண்டில் பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்திருக்கிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்பன் அருகில் உள்ள பிரப்பன் வலசையில்  முருகனை நினைத்து கடும் தவம் இருந்ததன் விளைவாக முருகன் இவருக்கு காட்சி கொடுத்திருக்கிறார்.

அது போல இறைவனையே நினைத்து கொண்டிருப்பவர்களுக்கும் புடம் போட்ட தங்கம் போல வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் இறைவன் கண்டிப்பாக காட்சி கொடுப்பார்.

இந்த கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகிவிட்டாலும் அனேக நல்ல மனிதர்கள் தூய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு இறை நினைப்பு அன்றி வேறு சிந்தனைகள் இருந்ததில்லை.

இறைவனை தொடர்ந்து நினைத்து வாழ்ந்து வருபவர்கள் பலர் ஆழ்ந்த தியான பயிற்சி எடுக்கின்றனர். தனக்கு விருப்பமான கடவுளை தனது மனக்கண்ணின் முன்னே கொண்டு வருகின்றனர். அவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு பார்க்கின்றனர் அப்படி கேள்வி கேட்டவுடனே அந்த தெய்வம் ஏதாவது ஒரு விஷயத்தை உணர்த்துவது போல தோன்றும் அந்த விசயத்தை செய்தால் சரியாக வரும் என்பது நம்பிக்கை.

அமைதியான முறையில் வாக்கு சொல்பவர்களும் ஆக்ரோஷமாக அருள்வாக்கு சொல்பவர்களும் இந்த முறையிலே தான் நம் பிரச்சினைகளுக்கு அருள்வாக்கு சொல்ல்கின்றனர். இன்னும் அமானுஷ்ய மனிதர்கள் ஆவிகள் உலகம் என்று தூய ஆத்மாக்களிடம் பேசுபவர்கள் என பலருக்கும் இதுவே ஆதாரமான விசயம்.

தீவிர இறை நம்பிக்கை, மனதை ஒரு நிலைப்படுத்தி நமக்கு பிடித்த தெய்வத்தை மட்டும் மனதில் நிறுத்தி தியானம் செய்தாலே போதும் கடவுள் நம்மிடம் பேசுவார் நமது கேள்விகளுக்கு பதில் சொல்வார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print