New Driving License: டிரைவிங் டெஸ்ட் எடுக்காமலேயே லைசன்ஸ் வாங்கலாம்… எப்படித் தெரியுமா?

இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்றால், ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிலாக இப்போது ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பள்ளிக்குச் சென்றாலே போதும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், இனி எந்தவித டிரைவிங் டெஸ்ட்டும் செய்யாமல் லைசன்ஸ் பெறுவது எப்படி என பார்க்கலாம்…

சாலையில் வண்டி ஓட்டிச் செல்ல வேண்டுமானால், ஓட்டுநர் உரிமத்துடன் ஆர்சி, இன்சூரன்ஸ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். நம் நாட்டில் சிலர் இவை எதுவுமே இல்லாமல் ரோட்டில் தாறுமாறாக வண்டி ஓட்டி வருகின்றனர். ஆனால் இங்கு நாம் பேசப்போவது அதைப் பற்றி அல்ல, எளிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி என்பதைப் பற்றித் தான்.

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல என்று மக்கள் நம்புகிறார்கள். ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் ஸ்லாட்டை பதிவு செய்து, எழுத்துத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று எல்எல்ஆர் பெற வேண்டும். அதன் பின்னர் 3 மாதம் கழித்து வண்டியுடன் ஆர்டிஓ அலுவலகம் சென்று அதிகாரி முன்பு 8 போட்டுக் காட்ட வேண்டும். அதன் பிறகு தான் ஓட்டுநர் உரிமம் உங்கள் கைக்கு வரும்.

இனி டிரைவிங் டெஸ்ட் தேவையில்லை:

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற, நீங்கள் மீண்டும் மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை (RTO) செல்ல வேண்டிய தேவை இனி இல்லை. ஆர்டிஓ அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர் தேர்வில் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நம்ப முடியவில்லையா?, உண்மையாகவே இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது.

டிரைவிங் ஸ்கூல் போனாலே போதும்:

இனி ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்றால், ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிலாக டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றாலே போதும். டிரைவிங் லைசென்ஸ் வேண்டும் என்றால் முதலில் டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று பெயரை பதிவு செய்ய வேண்டும். வாகனம் ஓட்டும் பயிற்சி இருக்க வேண்டும். அதாவது RTO அலுவலகத்தில் முடிக்க வேண்டிய ஓட்டுநர் தேர்வை ஓட்டுநர் பள்ளியிலேயே முடித்துவிடலாம்.

பயிற்சித் திட்டம் முடிந்ததும், ஓட்டுநர் பள்ளியில் இருந்து தயாரிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இதனை லைசன்ஸ் கோரி விண்ணப்பிக்கும் பிற ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதால் நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று டிரைவிங் டெஸ்ட் செய்து காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆர்டிஓ அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை பரிசோதித்துவிட்டு, அதில் தயாரிப்பு சான்றிதழ் இருந்தால் அதனை இதன் மூலம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆர்டிஓ அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்துடன் தயாரிப்பு சான்றிதழை சரிபார்ப்பார்கள். அவ்வளவு தான் உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் வீடு தேடி வந்துவிடும்.

இந்த புதிய விதியின்படி, டிரைவிங் டெஸ்ட் இல்லாமல் லைசன்ஸ் பெற, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு மையத்தில் மட்டுமே பயிற்சி பெற வேண்டும். இந்த லைசன்ஸ் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு, நீங்கள் ஓட்டுநர் தேர்வு மையத்திற்குச் சென்று ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கலாம்.

டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி முடித்த பிறகு அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்ற பிறகு, அந்தந்த ஓட்டுநர் பள்ளி உங்களுக்கு சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழின் அடிப்படையில், ஆர்டிஓவிடமிருந்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment