Connect with us

அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் எப்படி ? நாளைய தினம் விசாரணை!!!

ADMK Office

தமிழகம்

அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் எப்படி ? நாளைய தினம் விசாரணை!!!

ஜூலை பதினொன்றாம் தேதியை அதிமுக உறுப்பினர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் அன்றைய தினம் கட்சி இரண்டாகப் பிழந்தநாளாக காணப்படுகிறது. ஏனென்றால் சென்னை வானரகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனால் சோகம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு சண்டையிட்டு கொண்டனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கற்களை வீசி சாலை நடுவே சண்டையிட்டனர்.

இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அதிமுகவின் அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடுத்திருந்தார். அதன்படி அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓ பன்னீர்செல்வம் மனு நாளைய தினம் விசாரணை செய்யப்பட உள்ளது.

நாளைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். ஏற்கனவே இன்றைய தினம் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top