அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!

பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இந்தப் பணத்திற்காகத் தான் எத்தனை பொய், எவ்வளவு லஞ்சம், எத்தனை கலவரம் என என்னென்னமோ நடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நியாயமாக சம்பாதிக்கும் பணம் மட்டுமே என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஆனால் ஒரு சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் சேர மாட்டேங்குறது? ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கிறது என்று புலம்பித் தவிப்பதையும் காணலாம். இவ்வளவு ஏன்? இந்தப் பிரச்சனை நமக்கே கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பணம் சம்பாதிப்பார்கள்.

ஆனால் இருக்கிற பணத்தை எப்படி காப்பது என்று தெரியாது. சிலருக்கு பணம் வருவதற்காக என்னென்னமோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாது. செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதாலும் பணம் வந்து சேர்வதில்லை. இப்போது பணம் சேர பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்வது என்று பார்க்கலாமா…

vasambu
vasambu

கண்ணாடி கூஜாவை எடுங்க. வசம்பு ஒன்றை எடுத்துக்கோங்க. இதை வைத்து எளிய முறையில் நாம் தாந்திரீக பரிகாரம் செய்யலாம். அடுத்து நமக்கு தேவை ரூபாய் நோட்டு ஒன்றை எடுங்க. கல் உப்பு ஒரு கண்ணாடிக் குடுவையில் எடுத்துக்கோங்க. இப்போ பரிகாரம் எப்படி செய்வது என் பார்ப்போம்.

வசம்புக்கு பணத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு. மாலை நேரத்தில் இதோட பேர் சொல்லக்கூடாது என்பர். ஏன்னா அப்போ பேர் சொன்னா இதோட சக்தி போயிடுமாம்.

நிறைய பணம் வைக்கிற இடத்தில இதை வைக்கலாம். பூஜை அறை, கிச்சனில் அரிசி வாளிக்குள் போடலாம்.

உதாரணமாக ரூ.500 நோட்டை எடுங்க. பூஜை அறையில் வைத்து அல்லது உள்ளங்கைகளில் வைத்து பொத்திக்கொண்டு சுவாமி கிட்ட எனக்கு கடன்பிரச்சனை தீரணும்னு சொல்லுங்க. இந்த வசம்பை ரூபாய் நோட்டில் வைத்து நல்லா சுருட்டுங்க.

அதை ஒரு மஞ்சள், பச்சை, சிவப்பு என ஏதாவது ஒரு கலர் நூலால் கட்டி கண்ணாடிக்குடுவையில் வைத்து மூடிவிடுங்க. இதை நீங்கள் எங்கே பணம் வச்சிருக்கீங்களோ அங்கே வைங்க. பணம் எடுக்கும்போது இது உங்கள் கண்ணில் படக்கூடாது. இதை ஒருமுறை வைத்தால் போதும்.

vasambu2 1
vasambu2

இது அப்படியே இருக்கும். வீட்டில் பணம் வர ஆரம்பிக்கும். இதை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றலாம். இந்த வசம்பை பூமிக்கு அடியில் புதைத்து விடுங்க. இன்னும் அதிகமாக சக்தி கிடைப்பதற்கு ஏற்கனவே வசம்பு, ரூபாய் நோட்டை உப்புக்கு அடியில் வைத்து கண்ணாடிக்குடுவையை மூடிவிடுங்க.

இது இன்னும் பவரா இருக்கும். உப்புங்கறதால வாரத்திற்கு ஒருமுறை மாற்றுங்க. கல் உப்பு மகாலெட்சுமி அம்சம். எது செய்தாலும் கண்ணாடிப் பொருள்களில் பண்ணுங்க. இந்த உப்பைக் கால் படாத இடம் அல்லது தண்ணீரில் போடுங்க. கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ செழிப்பு சீக்கிரத்தில் உண்டாகும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews