மகா சிவராத்திரியில் எப்படி விரதம் இருக்க வேண்டும்?

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் மகாசிவராத்திரி தினத்தில்  சிவபெருமானை வழிபட்டு   ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் நாளை மார்ச் 1 அன்று மகாசிவராத்திரி தினம் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் விரதம் இருப்பவர்கள் நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி சிவலிங்க பூஜை செய்யவேண்டும்.

இதனை தொடர்ந்து கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டும் மற்றவர்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். ஆனால் உணவு  சாப்பிட வேண்டும் என்ற பட்ச்சத்தில் பழங்கள், அவல் மற்றும் பழச்சாறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பின்னர் சிவராத்திரி அன்று அதிகாலை 4 மணிக்கு சிவனுக்கு பூஜைகள் செய்தவுடன் தான் விரதத்தை முடிக்க வேண்டும். வீட்டிற்கு வந்து ஏதேனும் ஒரு சாதத்தை செய்து அதை கோயிலுக்கு சென்று, அங்கு சிவனை தரிசித்து வரும் சிவ பக்தர்களுக்கு வழங்குவதால்  சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment