சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவில் கைதி ஒருவர் கம்பி வழியே புகுந்து தப்பியோடியது எப்படி என்று போலீசார் டெமோ காட்ட மக்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி- சின்ச்வாடின் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட கைதி சுஷாந்த். இவர் செய்த ஒரு குற்றத்தால் போலீசார் இவரை கடந்த வாரம் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த இவர் எப்படியாவது தப்பிக்க எண்ணி, அதற்கான ப்ளானைப் போட்டுள்ளார்.

அதன்படி சிறையில் இருந்து தப்பியும் சென்றுள்ளார். விடிந்து பார்த்தபோது பூட்டப்பட்ட சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவத்தைக் கண்டு போலீசார் கடும் ஷாக்கிற்கு ஆளாகியுள்ளனர்.

அதன்பின்னர் தீவிரமாகத் தேடி கைதியைக் கண்டுபிடித்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசார் எப்படி சிறையில் இருந்து தப்பித்தாய் என்று கேட்க, கைதி லைவ் கம்பிக்குள் புகுந்து உள்ளே வருவதும், வெளியே போவதும் என லைவ் டெமோ காட்டி அனைவரையும் சிரிப்பிற்கு உள்ளாக்கியுள்ளார்.

கைதி போலீசாருக்கு சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று லைவ் டெமோ காட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...