காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!

மனிதனின் இறுதி மூச்சு வரை ஒட்டிக்கொண்டே வரும் ஒரு உணர்வு தான் இந்த காமம். பருவவயதில் தலைவிரித்தாடுகிறது. அதன் போக்கில் உடலைக் கொண்டு போகச் செய்கிறது. மனம் அதனை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எங்கு போகிறோம்…என்ன செய்கிறோம் என்றெல்லாம் தெரியாது. அதற்கு தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும்.

அதனால் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று ஒரு வெறி வந்து விடுகிறது. இந்த கட்டுக்கடங்காத ஆசையை பலரும் அடக்கி விட முற்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. தினம் தினம் அதனுடன் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

attractive lips
attractive lips

இது திருமணம் ஆனவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். இதை முடிந்த அளவு நம் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இந்த எண்ணமே வராமல் இருக்க வேண்டும் என்றும் அதற்கு என்ன செய்வது என்பதும் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கு சில எளிய பயிற்சி முறைகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றும் மும்மலங்கள். இவை தான் நாம் அடுத்தடுத்த பிறவி எடுப்பதற்குக் காரணங்கள்.
போன பிறவியில் நாம் இறைநிலையை அடையவில்லை என்பதால் தான் இந்த பிறவியை எடுத்து இருக்கிறோம். காம எண்ணத்தில் இருந்து விடுபட என்ன செய்யணும்னா முதல்ல எனக்கு காம எண்ணமே வரக்கூடாதுன்னு நினைக்கறத விட்டுரணும்.

உடம்புக்குன்னு ஒரு சில உணர்வுகள் வரும். பசி எடுக்கும். குறிப்பிட்ட வயது வரும்போது காம உணர்வுகளும் வரும். இது தவறு கிடையாது. இது உடலின் ஒரு தேவை. ஒரு சிலர் என்ன பண்றாங்கன்னா அது மட்டுமே நமது தேவை என நினைத்து அதை நோக்கியே போய் விடுகிறோம்.

காதலுக்கும் காமத்திற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு தான் உண்டு. அதை பருவ வயதினர் எளிதில் தாண்டி விடுகிறார்கள்.

love vs lust
love vs lust

இன்னொரு சாரார் அதை வேணாம் என்று வெறுத்து ஒதுக்குகின்றனர். சிறுவயதில் நாம் பொம்மை கார் மேல் ஆசைப்பட்டிருப்போம். அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வோம். ஆனால் இன்று நம் சிந்தனை மாற்றம் அடைந்துள்ளது. அந்தப் பொம்மை காரைப் பார்த்தால் இது என்ன என்று அசட்டை செய்து விடுவோம். நம் சிந்தனை அதை விட உயர்ந்து உண்மையான காரை வாங்க வேண்டும் என்ற அளவில் உள்ளது.

நாம் வேணும் என்று நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் திறமையான விஷயங்களை நோக்கி இருக்கிறது. அதை விட மேன்மையாக எண்ணும்போது நம் எண்ணங்கள் உயர்ந்த நிலையை நோக்கியே சென்று கொண்டு இருக்கும். அதனால் தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மேன்மையை நோக்கி சிந்திக்கும்போது நம்மை அறியாமலேயே இந்த சிற்றின்ப சிந்தனைகள் எல்லாம் மறைந்து போகின்றன. அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இது தப்பான விஷயம் என்றும் சொல்லக்கூடாது. இது சரியான விஷயம் என்றும் சொல்லிவிடக் கூடாது. அதைப்பற்றியே நினைக்காமல் இருப்பது தான் உத்தமம். இந்த நிலைக்கு நாம் வந்து விட்டால் இந்த காம எண்ணங்களே நம்மை ஒருபோதும் அண்டாது.

lust
lust

நமது மனதின் இயல்லே இது தான். நமக்கு எது எது எல்லாம் பிடிக்கும்? எவையெல்லாம் பிடிக்காது? இவற்றைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டே இருக்கும். நாம் தொடர்ந்து கவனித்து வந்தால் இது தெரிய வரும். ஓட்டலுக்குப் போனால் கூட நமக்கு எந்த சாப்பாடு பிடிக்குமோ அதைப்பற்றி தான் யோசிப்போம். அல்லது பிடிக்காத சாப்பாட்டைப் பற்றி யோசிப்போம். ஆனால் மெனுவைப் பார்த்தால் என்னென்னவெல்லாமோ புதுப்புது உணவுவகைகளாக இருக்கும். அதைப்பற்றி எல்லாம் நம் மனது யோசிக்காது. அதே போல தான் நமக்குள் எது பிடிச்சது?

எது பிடிக்கலன்னு எதைப்பற்றியுமே சிந்தனை பண்ணக்கூடாது. காமம் என்பது ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ கொள்ளும் ஒரு வித புணர்ச்சி மட்டும் அல்ல. அதனால் வரும் ஈர்ப்பு மட்டும் காமம் ஆகி விடாது. நமக்கு பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடுவதும், நமக்கு பிடித்த ஆடைகளை உடுத்துவதும் கூட ஒரு வகையான காமம் தான். நமக்கு பிடிச்சது எது எல்லாம் உள்ளதோ அது எல்லாமே காமம் தான்.

அதே போல் எது எது எல்லாம் பிடிக்கலைன்னு நினைக்கிறோமோ அதுவும் காமம் தான். அதனால் உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது என்ற இந்த இரண்டு விஷயங்களிலிருந்து எப்போ வெளியே வர்றீங்களோ அப்போ தான் முழுமையாக இந்த காமத்தில் இருந்து விடுபட முடியும். இந்த காம எண்ணம் என்பது பாலியல் ரீதியானது மட்டுமல்ல. இந்த ஆசை உங்களுக்கு நிறைவேறி விட்டால் வேறொரு எண்ணத்தின் மீது ஈர்ப்பு வந்து விடும்.

இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி நீங்கள் இதில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் இது பிடிச்சது பிடிக்காதது என்று இல்லாமல் அதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இன்னும் ஒரு படி மேல் நோக்கி செல்ல வேண்டும் என்றால் எந்த விஷயத்தைப் பார்த்தாலும் இது நல்லாருக்கு..இது நல்லா இல்லன்னு நீங்க நினைக்காம இருந்தீங்கன்னா மேலும் உங்கள் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews