Tamil Nadu
மாதம் ரூ.1000 பெற ரேசன் கார்டில் குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் தரப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி விரைவில் அந்த பணத்தை கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயருக்கு பதிலாக குடும்பத்தலைவி பெயர் இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியானதை அடுத்து இந்த பெயரை மாற்றுவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்
https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று குடும்பத் தலைவர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பின்னர் ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். பின்னர் கேப்ட்சா செய்தபின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
அதன் பின்னர் குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் சென்று ஏற்கனவே இருந்த குடும்பத்தலைவருக்கு பதிலாக யாரை மாற்ற வேண்டும் என்ற பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஏற்கனவே இருந்த குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ் அல்லது விவாகரத்து சான்றிதழ் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் குடும்பத் தலைவியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்ய வேண்டும்
இவை அனைத்தும் சரியாக செய்தால் வெற்றிகரமாக குடும்ப தலைவி பெயரை மாற்றி விடலாம் என்பதும் அதன் பின்னர் அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
