ஆயுத பூஜையினைக் கொண்டாடும் முறை!!

369d9178b503e02d197ab2311e2a7be8

நவராத்திரியானது 9 நாட்களுக்கு பக்தர்களால் அனுசரிக்கப்படுகின்றது, இந்த 9 நாட்களும் பூஜையினை நடத்தி கடவுளின் அனுகூலத்தைப் பலர் பெற்றாலும், இந்தப் பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது 9 வது நாளான ஆயுத பூஜை நாளைத் தான்.

இப்போது நாம் ஆயுத பூஜையினை எப்படிக் கொண்டாடுதல் வேண்டும் என்று பார்க்கலாம். அதாவது ஆயுத பூஜையானது காளி தேவியின் அனுகூலத்தைப் பெறும் பொருட்டும், மேலும் நாம் வருடம் முழுவதும் தொழில் செய்யப் பயன்படும் ஆயுதங்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டும் கொண்டாடப்படுவதாகும்.

மற்ற நாட்களில் விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகளும் கட்டாயம் ஆயுத பூஜையன்று விடுமுறை அளித்து, ஆயுதங்களுக்கு மரியாதை செய்வர். இதுவே வீட்டில் என்று எடுத்துக் கொண்டால், அனைத்துவகையான ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு வைத்து வழிபாடு செய்யப்பட வேண்டு.

மேலும் அம்மனுக்கு பூக்களால் மாலை கொய்து, பொரி, சுண்டல், பழங்கள், இனிப்பு என அனைத்தையும் வைத்து வழிபடுதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.