கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்

தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் கிருபானந்த வாரியார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இவ்வாறு இளமையிலேயே ஆன்மீகத்தின்பால் நாட்டம் கொண்டு பின்னாளில் சிறந்த முருக பக்தராகவும், உலகின் தலைசிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் விளங்கினார். கிருபானந்த வாரியார் தீவிர முருக பக்தராக மாறியதற்குப் பின் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சிறு வயதில் கிருபானந்த வாரியார் காலில் புண் ஒன்று ஏற்பட்டது, சின்னப் புண் தானே என்று அவரும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால், அவருக்குள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்தவரை மருத்துவமனையில் காட்டியபோது அவரைச் சோதித்த டாக்டர், “உள்ளே செப்டிக் ஆகி விட்டது, உடனே காலை எடுக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தார்.

மேலும் காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவமனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள், சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.

கிருபானந்த வாரியார் தந்தை அரசு அதிகாரி. ஆனால் அவரின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனது குடும்பம். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்,  தன்னைப் படைத்த கடவுளுக்கே அந்தக் காலை கொடுத்து விடுவோம் என நினைத்தார்.

அப்போது கிருபானந்த வாரியார் எடுத்த முடிவு தான் அவர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம். பாதிக்கப்பட்ட தன்னுடைய கால் தேயும் வரை முருகப்பெருமான் ஆலயத்தை சுற்றுவோம். இவ்வாறு நினைத்த அவர் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று கணக்கே இல்லாமல் காலை மாலை என தினமும் கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தார்.

எஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!

சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக, அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில், தானே ஆற ஆரம்பித்த புண், இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. அன்று எடுத்த முடிவு தான் கிருபானந்த வாரியார், இனி என் வாழ் நாள் முழுதும், முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில், அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக, பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

தன் உடல் தளரும் வரை, ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே, முருகன் புகழ் பாடி பின் திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்டார் வாரியார் சுவாமிகள். மக்கள் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு “பொன்மனச் செம்மல்” பட்டம் வழங்கி சிறப்பித்தது திரு முருக கிருபானந்த வாரியார் தான்..

மேலும் கிருபானந்த வாரியார் 4 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் அறியாத தகவல். அவை நவக்கிரக நாயகி, துணைவன், திருவருள் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த மிருதங்க சக்கரவர்த்தி ஆகியவை ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.