தமிழ்நாடு புதிய சாதனை! இரண்டு நாட்களில் இவ்வளவு மாற்றமா? நிம்மதியில் மக்கள்!!

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகமாக பரவிய கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கோடை காலத்தில் நம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதோடு உயிரிழப்புகளும் அதிகமாகவே காணப்பட்டது.

கொரோனா

இதனை இந்திய அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக 700க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 739 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 821 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் ஓரளவு நிம்மதியில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment