அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வழங்கும் ஆஸ்கர் விருது திரையுலகிலேயே மிகவும் உயரியதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்த முறை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஆஸ்கர் விருது பெரும் பிரபலங்களுக்கு பரிசுத்தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்…
சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது பெறும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் போன்றவர்களுக்கு பரிசுத்தொகையாக ஒரு ரூபாய் கூட வழங்கப்படுவது என்பதே நிதர்சனமான உண்மை.
வெற்றியாளர்களுக்கு விருதுடன் சேர்ந்த எந்த தொகையும் கிடைக்காது என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றால் அதை விடவும் அதிக பலன்களைப் பெறுகின்றனர்.
IBISworld நடத்திய ஆய்வின் மூலம், ஆஸ்கார் விருது பெறும் பிரபலங்களின் சம்பளம் சராசரியாக 20 சதவீதம் வரை கேட்காமலே உயர்ந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
கோல்கேட் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், ஆஸ்கர் விருது பெறும் பிரபலங்களில் பெண்களை விட ஆண் நடிகர்களுக்கே அதிக சம்பளம் பெறுவது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, ஆண் நடிகர்களின் சம்பளம் 3.6 மில்லியன் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பெண் நடிகைகளுக்கு வெறும் 50 ஆயிரம் யூரோக்கள் வரையில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்கர் விருது பெறும் பிரபலங்கள் விளம்பர படங்கள், பிராண்ட் புரோமோஷன் உள்ளிட்டவை மூலமாகவும் கணிசமான வருமானத்தை பெறுவது குறிப்பிடத்தக்கது.