எம்மாடியோ..! வலிமை படத்தின் முதல்நாள் வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். இவர் நடித்த வலிமை திரைப்படமானது இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் நேற்று வெளியான நிலையில், உலகம் முழுவதும் 4000 ஆயிரம் திரையரங்குகளில் மாஸ்காட்டியது.
அந்த வகையில் தமிழகத்தில் வலிமைப்படமானது நேற்று ஒரே நாளில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் ரூ.1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை வெளியான அஜித் திரைப்படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. அத்துடன், ரஜினி நடித்த ‘அண்ணாத்த’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
