எம்மாடியோ..! 45-வது சென்னை புத்தக கண்காட்சியில் 18 நாள் வசூல் இத்தனை கோடியா ?

45-வது சென்னை புத்தககண்காட்சி பிப்ரவரி 16- ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 19- வது நாளாக நடைபெற்ற புத்தக கண்காட்சியானது இன்றோடு நிறைவடைந்து உள்ளது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியானது இன்று 9 மணி வரை நீட்டிக்கப்பட்டதால் வாசகர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இந்த புத்தகக் கண்காட்சியில் வரலாற்று நூல்கள், சுயமுன்னேற்ற நூல்கள், ஆங்கில நாவல்கள், நவீன இலக்கிய சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்களை அதிகமாக வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 45-வது சென்னை புத்தககண்காட்சியில் 18 நாட்களில் ரூ.12 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்களை விற்பனை  செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment