மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் இவ்வளவு மிச்சமா?

தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு இந்திய அளவில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு விதமான புதிய திட்டங்களை அறிவித்தார்.

அதுவும் மகளிரை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பு இன்றளவும் ஸ்டாலினுக்கு கிடைக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நகர்புற பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாத இலவச பயண சேவை.

இதனால் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கின்றோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கூறினார். இலவச பேருந்து பயண திட்டம் மூலம் மாதம் 600 முதல் 1200 ரூபாய் வரை மிச்சமாக பெண்கள் கூறியுள்ளனர் என்று ஸ்டாலின் கூறினார்.

ஒரே கையெழுத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதுதான் எங்கள் திராவிட மாடல் ஆட்சி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இருந்தாலும் பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் இலவசப் பயண திட்டம் வழங்கப்பட்டு வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment